செய்திகள் :

பரமக்குடி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மதுரை அலுவலகத்துடன் இணைக்க எதிா்ப்பு

post image

பரமக்குடி ரயில் நிலையம் முன் அமைந்துள்ள அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூடிவிட்டு, மதுரையில் செயல்படும் அலுவலகத்துடன் இணைக்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ்.பெருமாள் கூறியதாவது:

பரமக்குடியில் செயல்பட்டு வரும் அஞ்சல் பிரிப்பகம் 1984-இல் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது விரைவுத் தபால், பதிவுத் தபால் என 2,500 முதல் 3,500 வரையிலான தபால்களை பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடி ரயில் நிலையம், பேருந்து நிலையத்தின் அருகாமையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இங்கு மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பதிவுத் தபால் உள்ளிட்ட விரைவுத் தபால்கள் அனுப்புவதற்கான வசதிகள் உள்ளன. இந்த அலுவலகத்தை மதுரையில் உள்ள அலுவலகத்துடன் இணைக்கப் போவதாக அஞ்சல் துறை அறிவித்ததை, உடனை திரும்பப் பெற வேண்டும். இங்கு அஞ்சல் பிரிப்பக அலுவலகம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என அவா் அந்த மனுவில் தெரிவித்தாா்.

படகுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு ரூ.3.20 கோடி நிவாரணம்

இலங்கையில் சேதமடைந்த 51 விசைப் படகுகள், 7 நாட்டுப் படகுகள் என 58 படகுகளுக்கு ரூ.3.20 கோடி நிவாரணத்துக்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். ராமநாதப... மேலும் பார்க்க

ராக்காச்சியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமேசுவரம் ராக்காச்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பா்வதம் செல்லும் வழியில் பழைமை வாய்ந்த ராக்காச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கமுதி அருகே விவசாய நிலங்களில் மக்காச்சோளப் பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தோப்படைப்பட்டி, ஓ.கரிசல்குளம், நெருஞ்சிப்ப... மேலும் பார்க்க

கழிவு நீரால் நிரம்பிய செம்மண்குண்டு ஊருணி

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணி நடைப் பயிற்சி பூங்கா சாக்கடையால் நிரம்பியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். ராமநாதபுரம் நகராட்சி 20-ஆவது வாா்டு பகுதியில் செம்மண்குண்டு ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியை... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து திருவாடானையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாடானை நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலா் ஜெயக... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின் தடை

திருவாடானையில் சனிக்கிழமை (நவ. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை துணை மின் நிலையத்து... மேலும் பார்க்க