செய்திகள் :

பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!

post image

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

இதையும் படிக்க: எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!

இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, ”ஆர்ஆர்ஆர் திரைப்படம்போல் பராசக்தி பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருவதால் அந்தக் காலகட்டத்தைக் காட்சிப்படுத்துவதற்காக பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை இன்று நடக்கும் அரசியல் சூழல்களுக்கு பொருந்தும்படியாக இருக்கும். பராசக்தியை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

உருகுது உருகுது மேக்கிங் விடியோ!

விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் கவி... மேலும் பார்க்க

அமித் திரிவேதி இசையில் பேட் கேர்ள்: முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமா... மேலும் பார்க்க

டோவினோ தாமஸின் நரிவேட்டை: ரிலீஸ் அப்டேட்!

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் 2012 முதல் நடித்து வருகிறார். என்னு நிண்டே மொய... மேலும் பார்க்க

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48. மேலும் பார்க்க

மெஸ்ஸி-நெய்மர் தருணங்கள்..! பிரேசில் வீரரின் தகாத பேச்சுக்கு ஆர்ஜென்டீன பயிற்சியாளர் பதில்!

பிரேசில் வீரர் ரபீனியாவின் ஆபாசமான பேச்சுக்கு ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பொறுமையான பதிலைக் கூறியுள்ளார்.நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் என பிரேசிலின் நட்சத்திர வீரர் ரபீ... மேலும் பார்க்க

ஆர்ஜென்டீனாவை தேற்கடிப்போம்..! ஆபாசமாகப் பேசிய பிரேசில் கால்பந்து வீரர்!

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ஆர்ஜென்டீனாவை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தேற்கடிப்போம் எனக் கூறியுள்ளார். தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி சமீபத்தில் உருகுவே அண... மேலும் பார்க்க