kanguva: "என்னையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்" -'கங்குவா' குறித்து விஜய்...
பரோஸ் தமிழ் டிரைலர்!
நடிகர் மோகன்லால் இயக்கியுள்ள பரோஸ் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் 40 ஆண்டுகள் நடிகராக இருக்கும் மோகன்லால், பரோஸ் என்கிற 3டி படத்தை இயக்கியுள்ளார். இதில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் மற்றும் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன் நாதஸ்வரம். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன்லால்.
இதையும் படிக்க: ஒரு ஸ்ரீவள்ளியின் மரணமும் குற்றவாளி புஷ்பாவும்!
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். தங்கப் புதையலைப் பாதுகாக்கும் கதாபாத்திரத்தில் கோகன்லால் நடித்துள்ளார்.
விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படம் வரும் டிச.25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.