'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
பல்லடம்: அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பாஜக தொண்டரிடம் ரூ.30,000 பிக்பாக்கெட்... போலீஸ் விசாரணை!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகக் கூறியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல்லடம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டரான ஆறுமுகம் என்பவரும் கலந்துகொண்டார். அண்ணாமலை கண்டன உரை ஆற்றி முடித்த பின் காரை நோக்கி ஆறுமுகம் நடந்து சென்றுள்ளார். இதைப் பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர், ஆறுமுகத்தின் வேட்டியை பிளேடால் கிழித்து டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தைச் திருடிச் சென்றுள்ளார்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்தபோதுதான் தன்னுடைய பணம் திருடுபோனது ஆறுமுகத்துக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசிபாளையம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸார் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அண்ணாமலை கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக தொண்டரின் ரூ. 30 ஆயிரம் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.