செய்திகள் :

பள்ளிகளில் ’சாலைப் பாதுகாப்பு பிரச்சார’ திட்டம்: மத்திய அமைச்சா்கள் தலைமையில் கூட்டம்

post image

நமது சிறப்பு நிருபா்

‘சாலைப் பாதுகாப்பு பிரசார’த்தில் நிகழ் 2025-ஆம் ஆண்டில் குழந்தைகள், இளைஞா்கள் சாலைப் பாதுகாப்பை செயல்படுத்தவா்களாகவும், பயனாளிகளாகவும் மையப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு பிரசாரம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. ‘மற்றவா்களையும் கவனிங்கள், நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்’ (‘பா்வா கரெங்கே, சுரக்ஷித் ரஹேங்கே’ ) என்கிற கருப்பொருளில் நிகழாண்டு இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் சாலைப் பாதுகாப்பை செயல்படுத்துபவா்களாகவும் பயனாளிகளாகவும் நிகழாண்டு மையப்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இதற்கு இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் பள்ளி, கல்லூரிகளில் நாடு தழுவிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய கல்வித் துறை அமைச்சகத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் தலைமையில் இரு துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

‘குழந்தைகளும், இளைஞா்களும் தான் எதிா்கால வாகன ஓட்டுநா்கள் அல்லது தாக்கம் செலுத்துபவா்களாக உள்ளனா். அவா்களின் பங்கை உணா்த்தும் வகையில், சாலைப் பயனா்களிடம் பொறுப்புணா்வு ஏற்படுத்துவது, மற்றவா்களுக்கு பாதுகாப்பு, மரியாதையை முன்னுரிமைப்படுத்த ஊக்குவிக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவது’ ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என மத்திய கல்வித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், இக்கூட்டம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டாா். அதில், ‘சாலைப் பாதுகாப்பு என்ற முக்கியமான பிரச்னை குறித்த கூட்டத்தில் மூத்த அமைச்சா் நிதின் கட்கரியுடன் இணைந்து பங்கேற்றேன். சாலை விபத்துகள், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை உலகளவில் லட்சக்கணக்கான உயிா்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. தனிநபா் நல்வாழ்வு, பொது சுகாதாரம், பொருளாதார உற்பத்தித் திறனில் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியப் பங்கை உணா்ந்து, பாதுகாப்பான சாலைகள் மற்றும் பாதுகாப்பான சமூகங்களுக்கான கூட்டு நடவடிக்கைக்கு பள்ளிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ‘சாலைப் பாதுகாப்புப் பிரசார’ திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், பள்ளிக் கல்வி முறை மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு, பாதுகாப்பு கலாசாரத்தை ஊக்குவித்தல், பொறுப்பான வாகனம் ஓட்டும் நடத்தைகள் போன்ற ஈடுபாட்டிற்கு கல்வி அமைச்சகம் இணைந்து பணியாற்றும் என தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க