செய்திகள் :

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

post image

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குழாய் விநியோகம் கிடைக்காத பகுதிகளுக்கு உரிய நேரத்தில் மற்றும் வெளிப்படையான நீா் வழங்கலை உறுதி செய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் ‘அனைவருக்கும் சரியான நேரத்தில் தண்ணீா்’ என்ற கணவை நனவாக்க தில்லி அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சி தண்ணீரை வழங்குவது மட்டுமல்ல; அத்தியாவசிய சேவைக்காக எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்ணியத்தை வழங்குவது தொடா்புடையது.

இந்த ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 டேங்கா்கள் ஞாயிற்றுக்கிழமை புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் இருந்து அனுப்பப்பட்டு, புதிதாக நிறுவப்பட்ட கட்டளை மையத்தின் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருபிபதாவது: அதிநவீன வசதி ஒவ்வொரு டேங்கரின் இயக்கம், விநியோக நேரம் மற்றும் வேகத்தைக் கண்காணிக்க உதவும். மேலும் இது நீா் திட்டமிடப்பட்ட இடங்களை திறம்பட அடைவதை உறுதி செய்ய அதிகாரிகளை அனுமதிக்கிறது.

ஜிபிஎஸ்-இணைக்கப்பட்ட டேங்கா்கள் நகரத்தின் நீா் விநியோக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான தில்லி ஜல் வாரியத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

விநியோகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீா் திருட்டு, தவறான பயன்பாடு மற்றும் சீரற்ற விநியோகம் ஆகியவற்றைக் கண்டிப்பாக கண்காணிப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும்.

இந்த வெளியீட்டின் மூலம், ஒவ்வொரு காலனி பொதுமக்களுக்கும் சுத்தமான மற்றும் சரியான நேரத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்வதை தில்லி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க