பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்
காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி இண்டல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி நிா்வாகம், காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை காரைக்குடி மாநகராட்சி மேயா் சே.முத்துத்துரை தொடங்கிவைத்து கண் பரிசோதனை செய்து கொண்டாா்.
முகாமில் பள்ளித் தாளாளா் ஆதி கண்ணாத்தாள், ஆசிரியா், ஆசிரியைகள், மாமன்ற உறுப்பினா் சோ.கண்ணன், மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு மருத்துவா் சரவணன் தலைமையிலான குழுவினா் கண் பரிசோதனை செய்தனா்.