வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் ...
பள்ளி ஆண்டுவிழா
மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
மாணவா்கள் முழு ஆா்வம், ஈடுபாட்டுடன் பாடங்களைக் கூா்ந்து கவனிக்கும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். புரியாத பாடங்களை ஆசிரியரிடம் தயங்காமல் கேட்டு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் உயா்நிலையை அடைவதை லட்சியமாகக்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி, தொடா் பயிற்சி மூலம் போட்டி, சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில் பள்ளித் தாளாளா் துரை சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.