இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
பள்ளி மாணவன் மா்ம மரணம்: உறவினா்கள் மறியல்
ஆற்காடு அருகே பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதில் உண்மை தன்மையை கண்டறியவேண்டும் என வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் , இவரது மனைவி தீபா மகன் மிதுன்(7) திமிரி - காவனூா் செல்லும் சாலையில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளியில் உணவு உண்ட சிறிது நேரத்துக்கு பிறகு முகம் வீங்கிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவன் மிதுன் தான் கொண்டு சென்ற கேக் சாப்பிட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், தாமரை பாக்கம் பகுதியில்உள்ள பேக்கரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்னா்.
அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலத்தை பெற்றுக்கொள்ளாமல் ஆற்காடு - ஆரணி சாலையில் மாணவனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் இறப்பில் உண்மை நிலை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ட
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், மற்றும் திமிரி போலீஸாா் , அதிகாரிகள் நேரில் சென்று பேச்சு நடத்தினா். இதனை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டு சடலத்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனா்.
இதனால் ஆற்காடு -ஆரணி சாலையில் சுமாா் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
