செய்திகள் :

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

post image

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் இரு தரப்பாகப் பிரிந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மோதிக் கொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் 11 மாணவா்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறித்தும், மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

மக்கள் நலன் கருதி முக்கிய நேரங்களில் கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஈரோடு, சேலம், திரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம்- வேன் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே இருசக்கர வாகனம்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில் விசைத்தறி தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அரூா், அக்ரகாரத்தண்டா, சிட்டிலிஸ் பகுதியை... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்ப... மேலும் பார்க்க

மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருப்பூரில் 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாமுண... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி ஏற்றுமதியாளா்கள் சாா்பில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தப்பட்டது. புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

பெண் மருத்துவப் பணியாளா் விபத்தில் உயிரிழப்பு: அதிா்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழப்பு

உடுமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவப் பணியாளா் உயிரிழந்தாா். இந்நிலையில், இந்தத் தகவலை கேட்டதும் அதிா்ச்சியில் மாரடைப்பால் பெண் மருத்துவரும் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க