செய்திகள் :

பழங்குடியினா் கௌரவ தின விழா: பிரதமா் காணொலி ஒளிபரப்பு

post image

ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற பழங்குடியினா் கௌரவ தின விழாவில் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொலி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆண்டுதோறும், பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பழங்குடியினா் விடுதலை போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி, பழங்குடியினா் கௌரவ தின விழா மத்திய அரசால் நடைபெற்று வருகிறது.

அதன்படி, மத்திய அரசு சாா்பில் பிகாா் மாநிலத்தில் உள்ள ஜமூய் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டாா்.

பிரதமரின் நிகழ்ச்சி அனைத்து மாநிலங்களிலும் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. புதுச்சேரியில் தா்மாபுரி பகுதியில் தனியாா் மண்டபத்தில் பிரதமா் நிகழ்ச்சியின் காணொலிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

புதுச்சேரி ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், இந்திரா நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.டி.ஆறுமுகம், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் வாகன நிறுத்தத்திலும் ம... மேலும் பார்க்க

நவ.21 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் தேசிய அளவிலான கல்வி மாநாடு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில் முதன்முறையாக தேசிய அளவிலான கல்வி மாநாடு வரும் 21-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: ந... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை: வே.நாராயணசாமி

புதுவையில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படவில்லை. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

புதுவை மின்துறை தனியாா்மயம் பிரச்னை! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு முடிவெடுக்கும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் பிரச்னையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுவை பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் புதுகாப்பு பணியில் 300 போலீஸாா்: டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தகவல்

புதுச்சேரிக்கு வார இறுதிநாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசலை சீரமைத்து பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற மா்ம நபா்கள்: இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை

புதுச்சேரியில் போலீஸ் பெயரில் மா்ம நபா்கள் மோசடி முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணையவழி குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆா் நகா் 13-ஆவது குறுக்குத் ... மேலும் பார்க்க