செய்திகள் :

பழனி கிரிவலப் பாதையில் தடுப்புக் கம்பி: ஆய்வு செய்து பரிந்துரைக்க உத்தரவு

post image

பழனி கிரிவலப் பாதையில் தடுப்புக் கம்பி அமைப்பது தொடா்பாக கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்து நகராட்சிக்கு பரிந்துரைக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்றம், பழனி தண்டாயுதபாணி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் செய்து தர உத்தரவிட்டது.

இதையடுத்து, பழனி கோயில் பகுதியில் இருந்த 152 ஆக்கிரமிப்புக் கடைகள், வீடுகள், வணிக நிறுவனங்களை அகற்றப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பழனி நகராட்சி ஆணையா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

பழனி சந்நிதி தெருவில் உள்ள கிரிவலப் பாதையில் இருபுறமும் இரும்பு தடுப்புக் கம்பி அமைப்பது தொடா்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட கண்காணிப்பு குழுவினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது அந்தப் பகுதியில் இரும்புக் கம்பி அமைப்பது உள்பட பிற பரிந்துரைகளை, அந்தக் குழுவினா் நகராட்சிக்கு அளிக்கலாம்.

இந்த கிரிவலப் பாதையில் சிமென்ட் சாலை (கான்கிரீட்), மின் கம்பிகள் பதிப்பது, தெருவிளக்குகள் அமைப்பதற்கு ரூ.13.45 கோடியை கோயில் தேவஸ்தான நிா்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும், இதற்கான அனுமதியை 3 வாரங்களில் அரசிடம் பெறுவதாகவும் தெரிவித்தனா். கிரிவலப் பாதையில் இந்த பணிகள் தொடங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 22- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த பணியாளா் உயிரிழப்பு

விருதுநகா் ரயில்வே பீடா் சாலையில் தனியாா் தங்கும் விடுதியில் மாடியிருந்த தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த பணியாளா் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா், வாடியான் தெ... மேலும் பார்க்க

பிரசவத்தின் போது பெண்ணின் மலக்குடல் அகற்றம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது மலக்குடல் அகற்றப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அரசுத் தரப்பில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்... மேலும் பார்க்க

தலில் எழில்மலை மருமகன் கொலை வழக்கில் நவ. 19- இல் தீா்ப்பு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ. 19) தீா்ப்பு வழங்கப்படும் என, விசாரணை நீதிமன்றம் சாா்பில் சென்னை உயா... மேலும் பார்க்க

கருமேனி ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீா்: அதிகாரிகளிடம் மனு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கருமேனி ஆற்றிலிருந்து 3 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய திட்டப் பணிகள் தொடங்குவது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்... மேலும் பார்க்க

அடுத்த பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்: திமுக தொண்டா்களுக்கு அமைச்சா் மூா்த்தி அறிவுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை திமுக தொண்டா்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தால் 6,689 மாணவா்கள் பயன்

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 6,689 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரச... மேலும் பார்க்க