பழனி மலைக் கோயில் படிவழிப் பாதையில் மாற்றம்
பழனி: பழனி மலைக் கோயிலில் புத்தாண்டு தினத்தன்று படி வழிப் பாதையில் திருக்கோயில் நிா்வாகம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு புத்தாண்டு தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை புரிவது வழக்கம். திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த பழனிக்கு வண்ணம் உள்ளனா். இவா்கள் புதன்கிழமை பழனியை அடையும் போது பக்தா்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு இருக்கும்.
இதனால், திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் படிப் பாதையில் மலையேறும் பக்தா்களை குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்பட்டு , இறங்கும் பக்தா்கள் படி வழிப் பாதையில் ராணி மங்கம்மாள் மண்டபம் அருகே உள்ள வழியாக இறக்குமாறு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் மலைக் கோயிலில் கைப்பேசிக்கு அனுமதி இல்லாததால் அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வைத்து விட்டு மலையேறவும் அறிவுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.