அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச...
பழனி முருகன் கோயிலில் 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது - நிர்வாகம் அறிவிப்பு
பழனி முருகன் கோயிலில் 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சுவாமி தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று வர ரோப் கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன.
ஐடி, ஆட்டோ பங்குகளின் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாள்களுக்கு பழனி முருகன் கோயிலில் ரோப் கார் இயங்காது என்றும் குறிப்பிட்ட நாள்களில் யானை பாதை, படிப்பாதை உள்ளிட்டவற்றை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.