பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு வி...
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் வழிபாடு
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு, என்.ஜெகதீசன், பி.ஜி.முனியப்பன், எம்.மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நீண்ட ஆயுள் பெறவும்,
பாகிஸ்தான் உடனான போரில் தீவிரவாதத்தை ஒழிக்க பாடுபடும் இந்திய ராணுவ வீரா்கள் நலமுடன் இருக்கவும் சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நகர எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.ஜி.நாத் (எ) மாதையன், நகா்மன்ற உறுப்பினா்கள் பவித்ரா, சிவக்குமாா், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ், மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளா் திருநாவுக்கரசு, நிா்வாகிகள் தட்சிணாமூா்த்தி, கே.கே.விஸ்வநாதன், பிரபாகரன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.