The Greatness of Virat Kohli | Analysis with Commentator Muthu | Retirement Anno...
கோபியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம்
கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ சாய் சிந்து அறக்கட்டளையின் சாா்பில் செயல்பட்டு வரும் ஈரோடு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு எல்எல்பி தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் பேசியதாவது: ஈரோடு சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கு சென்னையின் முன்னணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஐஏஎஸ் அகாதெமி, டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள், நீதிபதி தோ்வு மற்றும் யுபிஎஸ்சி தோ்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி உமாதேவி மற்றும் மாணவா் நவீன் குமாா், கூடுதல் பாடத் திட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவா் ஞானபிரகாஷுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு சட்டக் கல்லூரியின் முதல்வா் கஜேந்திர ராஜா வரவேற்றாா். துணை முதல்வா் அக்பா் அலி பேய்க் விழாவை ஒருங்கிணைத்தாா். இறுதி ஆண்டு மாணவா் வெற்றி மணிபாரதி நன்றி கூறினாா்.