பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாரமுல்லாவில் ஊடுருவல் முயற்சி - 2 தீவிரவாதிகளை வீழ்த்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்த பைசரான் பள்ளத்தாக்கில் திடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 28 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.
அதன் விளைவாகா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாரமுல்லா என்ற இடத்தின் வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை ராணுவத்தினர் வீழ்த்தியிருக்கின்றனர்.

நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இராணுவம் தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போர்க்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்
இதற்கு நடுவில் பஹல்காம் பகுதியில் 6 தீவிரவாரிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.
ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
OP TIKKA, Baramulla
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) April 23, 2025
On 23 Apr 2025, approximately 2-3 UI terrorists tried to infiltrate through general area Sarjeevan at Uri Nala, Baramulla, the alert tps on LC challenged and intercepted them resulting in a firefight.
Operation is in progress.#Kashmir@adgpi… pic.twitter.com/FOTXiTNYSf
பாகிஸ்தானுக்கு பங்கில்லை..?
தீவிரவாத தாக்குதல் குறித்த தகவல் வெளியான உடனேயே தனது சவுதி பயணத்தின் திட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி, உடனடியாக இந்தியா திரும்பினார். இப்போது மத்திய அமைச்சர்களுடன் அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியாவின் உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்திய அரசும் இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக இதுவரைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.