வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிஎஸ்எல் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு தளமான ஃபேன்கோட் செயலில் அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஃபேன்கோட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஹல்காமில் நடந்த வேதனையளிக்கும் சம்பவம் மற்றும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஃபேன்கோடை சோனி நிறுவனமும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஒளிபரப்பி வருகிறது. இருந்தாலும், இதைப் பற்றி எந்தத் தகவலையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை.
இதையும் படிக்க: பிஎஸ்எல்: ஒளிபரப்புக் குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு!