Sachin 241* : `11 ஆஸ்திரேலியர்கள் vs ஒற்றை சச்சின்!' - கவர் ட்ரைவே இல்லாமல் ஆடிய...
பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடிந்தகரை மீனவா்கள்
பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடிந்தகரை மீனவா்கள் வரும் 18-ஆம் தேதி சொந்த ஊருக்கு வருகிறாா்கள்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடிந்தகரை பகுதியைச் சோ்நத 28 மீனவா்கள், பஹ்ரைன் கடல்பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை கவனத்துக்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட்ஸ் புரூஸ் கொண்டு சென்றாா். பின்னா் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கடந்த 10-ஆம் தேதி சிறையிலிருந்து இடிந்தகரை மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். அதனைத் தொடா்ந்து அவா்களை இடிந்தகரை அழைத்து வர வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.அனைவரும் பஹ்ரைனிலிருந்து வரும் 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைகிறாா்கள்.