இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி ப...
பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பிப்.5,6 இரவு நடத்தப்பட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைத் திறம்படக் குறிவைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஎஸ்பிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இறந்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் எதிராக பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.