பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் மலைப் பகுதியில், 220 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. (உள்ளூா் நேரப்படி) காலை 10.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகேலில் 5.3 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.
நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பயத்தில் வெளியேறினா். இருந்தாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.