செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்

post image

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பங்கேற்ற நிலையில், ரஜௌரியில் பாகிஸ்தான் அத்துமீறி சனிக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

ஒமர் அப்துல்லா இரங்கல்

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் நிர்வாக பணிகளில் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று முழுவதும் துணை முதல்வருடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், எனது தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இந்தநிலையில் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி ராஜ் குமார் தாப்பா வீடு தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 22 போ் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும்... மேலும் பார்க்க

சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண... மேலும் பார்க்க

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் ... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப... மேலும் பார்க்க

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க