செய்திகள் :

பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

post image

பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 12) ஆற்றிய உரை:

சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல்வழியிலும், பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி, ஏழை – பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்.

நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும்!

இதையும் படிக்க: 'நீதித்துறை வலுவாக இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்' - புரி சங்கராச்சாரியார்

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், ஸ்ரீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும்.

அதற்காகத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசில் அறிவித்திருக்கிறோம்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்! தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்தப் போராளிகளை போற்றுவதற்காக மட்டுமல்ல! அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச் செல்ல!

வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம் என்று பேசினார்.

ரோஜா - 2 தொடர் அறிவிப்பு!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது. ரோஜா தொடரில... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) ச... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க