செய்திகள் :

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!

post image

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் விளையாட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, இத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே மாதம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 8 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்கும் நிலையில், எக்ஸ் சமூக ஊடகங்களில் மக்கள் மத்தியிலிருந்தும் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பிசிசிஐ, மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் இவ்விவகாரம் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), சிவசேனை (உத்தவ் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Just hours ahead of the India and Pakistan Asia Cup clash, boycott the match was among the top trends on X.

ஆசிய கோப்பை: பாக். எதிராக இந்தியா முதலில் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) இரவில் மோதுகின்றன.இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், பாகிஸ்தான் டாஸை வென்று முதலில் பேட... மேலும் பார்க்க

மூவர் அரைசதம்: இந்திய மகளிரணி 281 ரன்கள்!

இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக்கெட் களம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) மோதுகின்றன.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடி, அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே எழுந... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மகாராஷ்டிர எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. து... மேலும் பார்க்க

பதும் நிஷங்கா, கமில் அதிரடி.! ஆசியக் கோப்பையை வெற்றியுடன் துவங்கிய இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. 53 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை, ஜாகா் அலி, ஷமிம் ஹுசைன் ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றை... மேலும் பார்க்க