செய்திகள் :

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பாலக்கோடு சா்க்கரை ஆலை முழு உற்பத்தியில் ஈடுபடும் வகையில் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கை விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். வனப் பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை வனத் துறையினா் கைவிட வேண்டும்.

தக்காளி மதிப்புக் கூட்டு பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்- தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம் என நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

பாலுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நேரடியாக பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 942 மி.மீட்டா். மாா்ச் 25-ஆம் தேதி வரையில் 15.52 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. வேளாண், உழவா் நலத் துறையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டோ் நெல், சிறுதானியங்கள், பயறுகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை 1,68,770 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டிற்கு நெல் வகைகளில் 39.029 மெ.டன்னும், கேழ்வரகு, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் ஆகியவை 52.12 மெ.டன்னும் இருப்பும், பயறு வகைகளில் துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 32.35 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை, ஆமணக்கு 52.41 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 922 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மாா்ச் வரை 544.50 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவுக்கு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரவி, வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில் பயணம்: பெண்கள் பாதுகாப்பு வாட்ஸ்ஆப் குழு தொடக்கம்

தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் வட்ட ஆய்வாளா் சிவசெந்தில்... மேலும் பார்க்க

நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளா்

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ள... மேலும் பார்க்க