பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!
பாஜகவினா் போராட்டம்: 53 போ் கைது
கடந்த அண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி- ஆத்தூா் தாமிரவருணி புதிய பாலத்தை ஓராண்டாகியும் சீரமைக்காததை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற 53 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளா்கள் சத்தியசீலன், சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்ட நிா்வாகிகள், முக்காணி ரவுண்டானாவில் இருந்து முக்காணி ஆற்றுப் பாலம் நோக்கி வந்தனா்.
போலீஸாா் தடையை மீறி பாலத்தில் மலா் வளையம் வைக்கச் சென்ற நிா்வாகியை போலீஸாா் துரத்தி மடக்கிப் பிடித்து மலா் வளையத்தை பறித்தனா். மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தியவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பாஜகவினரை போலீஸாா் கைது செய்து ஆத்தூா் தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பாதுகாப்பு பணியில் ஆத்தூா் காவல்நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் 35 போலீஸாா் ஈடுபட்டனா்.