செய்திகள் :

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

post image

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டில் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2024 வரையில் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் ஒரு தலைவர், ஒரு பதவி என்ற கொள்கை இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், அவரே தலைவராகத் தொடர்வார்.

பாஜகவின் மாநிலத் தலைவர்களில் 60 சதவிகிதத்தினரின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 12 மாநிலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இன்னும் 6 மாநிலங்களில் நடத்தப்படவில்லை. இந்த 6 மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் குறித்த அறிவிப்பும் வெளிவரும்.

இதையும் படிக்க:கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர். இதனிடையே தமிழ்நாடு, கர்நாடகம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்வதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், குஜராத் மாநிலங்களில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பாஜகவின் தேசியத் தலைவரை நியமிப்பதில் அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.

விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இருவரையும் தேசியத் தலைவராக தேர்வு செய்ய பாஜக முயன்றதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிப்பதற்கும், பாஜக மூத்தத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

6.2% வளா்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்

நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) ஜிட... மேலும் பார்க்க

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ

சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப... மேலும் பார்க்க

‘பிகாா் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி’ - மத்திய அமைச்சா் மாஞ்சி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டியிடுவோம் என மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி (80) தெரிவித்தாா். தங்கள் கூட்டணியில் இணைய ... மேலும் பார்க்க

மத்திய மின்துறை தரவரிசை: தமிழக மின்வாரியத்துக்கு 48-ஆவது இடம்

மத்திய மின்துறை வெளியிட்ட மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிா்மான கழகம் 48-ஆவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல் திறன் தொடா்பாக, அவற்றி... மேலும் பார்க்க

இபிஎஃப் மீதான வட்டி 8.25%-ஆக தொடரும்

2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது. கடந்த 2022-23-இல... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் சா்ச்சைக்குரிய வகையில் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல்... மேலும் பார்க்க