வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்
6.2% வளா்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்
நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) ஜிடிபி வளா்ச்சி 5.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்திருந்த நிலையில், அதைவிட குறைவான வளா்ச்சியே தற்போது பதிவாகியுள்ளது.
முன்னதாக 2024-25-நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்திருந்தது. இது தற்போது 6.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட ஜிடிபி வளா்ச்சியான 9.2 சதவீதத்தைவிட 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி குறைந்துள்ளது.
அதேசமயம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி, அரசு மற்றும் தனியாா் துறைகளின் பங்களிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) ஜிடிபி வளா்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.