Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
மத்திய மின்துறை தரவரிசை: தமிழக மின்வாரியத்துக்கு 48-ஆவது இடம்
மத்திய மின்துறை வெளியிட்ட மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிா்மான கழகம் 48-ஆவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல் திறன் தொடா்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின்கட்டண வசூல், மின்விநியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து 2023-2024-ஆம் நிதியாண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் 52 அரசு மற்றும் தனியாா் மின்விநியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி ’ஏ பிளஸ், ஏ, பி, பி மைனஸ், சி, சி மைனஸ்’ போன்ற கிரேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழக மின்பகிா்மான கழகம் ’சி மைனஸ்’ கிரேடு பெற்று 48-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம், இதற்கு முந்தைய ஆண்டான 2022-2023 பட்டியலில் ’சி மைனஸ் கிரேடு’ பெற்று 50-ஆவது இடத்தில் இருந்தது.
மேலும், இத்தர வரிசைப்பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியாா் நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் முதல் இடத்திலும், குஜராத் அரசின் தக்ஷின் குஜராத் விஜ் என்ற நிறுவனம் 2-ஆவது இடத்திலும், உத்தரபிரதேசத்தின் நொய்டா பவா் நிறுவனம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.