செய்திகள் :

பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்

post image

புதுதில்லி: பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

மேலும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் சொல்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அம்பேத்கரின் உண்மையான உணர்வுகளையும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.

இந்த நிலையில், அம்பேத்கரின் பெயரை சொல்வது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகிவிட்டதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதள பக்க பதிவில், மனுஸ்மிருதி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கரால் நிச்சயம் பிரச்னை வரும் என பதிவிட்டுள்ளார்

இதையும் படிக்க |அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்! - கார்கே

மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், உள்துறை அமைச்சரின் அம்பேத்கர் அவமதிப்பு, பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது, அவர்களது அரசியல் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தனர், சங்கபரிவார் மக்கள் மனுஸ்மிருதியை அமல்படுத்தவும்,இந்திய அரசியலமைப்பிற்கு எதிராகவும் நின்றார்கள். ராம்லீலா மைதானத்தில் அரசியல் சாசன நகல்களை எரித்தனர்.

தற்போது அவர்களது தந்திரம் இந்திய மக்களால் முறியடிக்கப்பட்டதும், விரக்தியில், அவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது புகழ்பெற்ற பங்களிப்பை அவமதிக்கிறார்கள்.

அம்பேத்கரின் பாரம்பரியம், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நமது அரசியலமைப்பு மீதான இந்தத் தாக்குதலை நாடு எதிர்க்கும்.

அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என கார்கே வலியுறுத்தியுள்ளார்.

அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்! சித்தராமையா

அம்பேத்கர் பிறக்காவிட்டிருந்தால் பிரதமர் மோடி இன்னும் டீ தான் விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்... மேலும் பார்க்க

அதானியைவிட 2.5 மடங்கு சரிவைக் கண்ட அம்பானி!

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம், ஜூலையில் அதன் உச்சநிலையிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடிக்குமே... மேலும் பார்க்க

'அரசியலமைப்பை ஒழித்துக்கட்டுவதே பாஜகவினரின் ஒரே வேலை' - ராகுல் காந்தி பேட்டி

பாஜகவினர் அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு!

நாடாளுமன்றத்தில் தேசி​ய​வாத காங்​கி​ரஸ் தலை​வர் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலையிலான மகாயுதி கூட்டணியால் மகா வ... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை பரிந்துரைத்த காங்கிரஸ்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்யவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன... மேலும் பார்க்க

டாடா இரும்புச் சுரங்கத்தில் 'பெண்கள் ஷிஃப்ட்'! இந்தியாவில் முதல்முறை!!

ஜார்க்கண்டில் உள்ள டாடா இரும்புச் சுரங்கத்தில் ஒரு ஷிஃப்ட் முழுவதும் பெண்கள் பணிபுரிகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் நோமுண்டி நகரத்தில் டாடா நிறுவனத்தின் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த... மேலும் பார்க்க