செய்திகள் :

`பாஜக இளைஞரணி தயாராக இருக்க வேண்டும்..!' - மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

post image

பாரதிய ஜனதா கட்சியின் 13வது மாநிலத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.

மேள தாளங்கள் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மற்றும் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் இணைந்து அவரை நாற்காலியில் அமர வைத்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக
தமிழ்நாடு பாஜக

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான எழுச்சி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நயினார் நாகேந்திரன். செய்தியாளர் சந்திப்பில் அனைத்து நிர்வாகிகளுக்கும் பெயர் சொல்லி நன்றி தெரிவித்தார்.

"இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் (திமுக) ஆட்சியை அகற்றுவதற்காக நான், என் மண் என் மக்கள் யாத்திரையில் பெரும் எழுச்சியைப் பார்த்தேன். அந்த எழுச்சியின் முடிவு 2026ல் தெரியும் என நினைக்கிறேன்.

அதற்காக இன்று நடக்கிற பாலியல் வன்கொடுமைகள், போதை பழக்க வழக்கங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் எங்களைக் காட்டிலும் பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதை நீங்கள் இந்தச் சமூகத்துக்கு ஆற்றுகிற சேவையாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு பாஜக
செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பற்றி உங்களுக்குத் தெரியும். உலகிலேயே காங்கிரஸைப் போன்ற ஊழல் கட்சி கிடையாது. அவர்களுடன்தான் இன்று திமுக கூட்டணி வைத்து, மாநில சுயாட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி செய்த குற்றத்தின் ஓர் அங்கமாக இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது ஹெரால்டு பேப்பர் ஊழல் குற்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடரவுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கள் இளைஞரணி சார்பாக போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

தமிழ்நாடு பாஜக
தமிழ்நாடு பாஜக

இதற்கான தேதியையும் நேரத்தையும் நாங்கள் அறிவிப்போம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் ஆர்பாட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

அதேபோல பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்காக, பொன்முடிக்கு எதிராக மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர். அதற்கான வழிகாட்டுதல்களை தேசிய மகளிர் அணி தலைவர் வழங்குவார்." எனப் பேசினார்.

இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக... மேலும் பார்க்க

Article 142 : `ஜக்தீப் தன்கரை நீக்க MP-க்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ - பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆளுநர் ஆர்.என். ரவிக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.அத... மேலும் பார்க்க

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

'தவெக ஐ.டி விங்!'தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மு... மேலும் பார்க்க

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்... மேலும் பார்க்க

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க