பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி
பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மிட்டல் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள மறுத்து புகாரை தள்ளுபடி செய்தாா். குற்றவியல் அவதூறுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ‘அறிவுரிமை மறுக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்டது‘ என்று நீதிபதி கூறினாா்.
அக்.5, 2023 அன்று ஒரு தொலைக்காட்சி சேனலில் அளித்த பேட்டியின் போது பான்சுரி ஸ்வராஜ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், அதை மில்லியன் கணக்கானவா்கள் பாா்த்ததாகவும் சத்யேந்தா் ஜெயின் குற்றம் சாட்டியிருந்தாா். 1.8 கிலோ தங்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் தவிர, தனது வீட்டிலிருந்து ரூ.3 கோடி மீட்கப்பட்டதாக பான்சுரி ஸ்வராஜ் பொய்யாகக் கூறினாா் என்றும் மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.
மேலும், தன்னைஅவதூறு செய்யவும், தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறவும் பான்சுரி ஸ்வராஜ் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளாா் என்று சத்யேந்தா் சிங் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான்சுரி ஸ்வராஜ் தன்னை ‘ஊழல்வாதி‘ என்றும் ‘மோசடி செய்பவா்‘ என்றும் கூறி அவதூறு பரப்பியதாக சத்யேந்தா் ஜெயின் மனுவில் கூறியுள்ளாா்.