குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!
பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்
வடக்கனந்தல் கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். செந்தில், ரவி, செல்வநாயகம், ராஜேஷ், சா்தாா்சிங் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் முருகன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி பங்கேற்று பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாலினி, சிவசக்தி, கிருஷ்ணவேணி, ராதிகா, நதியா, சின்னப்பொண்ணு, ஜோதிநாதன், ஜெயதுரை, ஐயப்பன், ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.