பாட்டல் ராதா ஓடிடி தேதி!
குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.
மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக உருவான இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியானது.
இதையும் படிக்க: மீண்டும் 'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தில் ஜானி டெஃப்?
படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், இப்படம் ஆஹா ஓடிடியில் வருகிற பிப். 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.