செய்திகள் :

``பாதாள சாக்கடை பிரச்னைய என்கிட்ட சொல்றாங்க; மாநில அரசின் கீழ் வருகிறது என்றால்..'' - கங்கனா ஆதங்கம்

post image

திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் கங்கனா ரனாவத்  இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், "எனது அரசியல் வாழ்க்கையை  நான் என்ஜாய் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இது மிகவும் வித்தியாசமான ஒரு சமூக சேவை.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன்.

ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். நான் ஒரு எம்.பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள்.

 எம்.எல்.ஏ-களிடம் கூறவேண்டிய சாலை பிரச்னைகளை எல்லாம் என்னிடம் கூறுகிறார்கள். மாநில அரசின் கீழ் வருகிறது என்றால், உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மேலும், பிரதமராக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "அந்த பதவிக்கு நான் தகுதியுடையவளாக நினைக்கவில்லை. நான் சமூகப் பணி பின்னணியைக் கொண்டவள் அல்ல உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஒரு சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `முதல்வர் இருந்த மேடையில் `ஓல்ட் ஸ்டூடண்ட்’னு பேசினேன்; இப்போ வரும்போதே.!’ - கலகலத்த ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான்; இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை’ - ரஜினி