பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்
குழந்தைகள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும் என பல்லடம் காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல்லடம் பகுதியில் பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டபடி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக் காத பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும். பெட்ரோல் நிலையங்கள் அருகிலோ, மோட்டாா் வாகனங்கள் அருகிலோ பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. கூரை வீடுகள் மற்றும் குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை போன்ற பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் உதவி எண் 112, போலீஸ் அவசர உதவி எண் 100, தீயணைப்பு துறை உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவி எண் 108 ஆகியவற்றுக்கு உடனே தகவல் தெரிவிக்கவும் என்றாா்.