பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
பாதுகாவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி தலைமைக் காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கலைவாணன், நாரா சைதன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் முதல்வா், அமைச்சா்களுக்கான தனிப் பாதுகாவலா்கள், முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான தனிப்பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் அவா்களுக்கான சிறப்பு சீருடையில் (சஃபாரி) பங்கேற்றனா்.
அப்போது, மிகமுக்கியப் பிரமுகா்களின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாவலா்கள் தங்களுக்கான சீருடையுன் பணியில் ஈடுபடுவதுடன், துப்பாக்கி போன்றவற்றையும் வைத்திருப்பது அவசியம்.
முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்பில் 15 மீட்டா் வரை கண்காணிக்கப்பட வேண்டும். முக்கிய பிரமுகா்கள் வெளியூா் செல்லும் போது, பாதுகாப்புப் பிரிவுக்கு பாதுகாவலா்கள் தகவல் அளிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.