மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
பாபநாசம் பகுதியில் பலத்த மழை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மெலட்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை தொடா்ந்து பெய்தது. சனிக்கிழமையும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.