செய்திகள் :

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!

post image

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நம்ம வீட்டு பொண்ணு, வீட்டுக்கு வீடு வாசப்படி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியவர் பிரவீன் பென்னட்.

இவர் இயக்கும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் இயக்கும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும். இவர் தற்போது மகாநதி தொடரை இயக்கி வருகிறார். இத்தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடரை இயக்குகிறார். இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா, கனா தொடர் நாயகி தர்ஷனா, நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தற்போது குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் மகாநதி, அய்யனார் துணை ஆகிய தொடர்களை தயாரித்து வரும் நிலையில், இப்புதிய தொடரையும் தயாரிக்கிறது. இத்தொடருக்கான வசனங்களை பிரியா தம்பி எழுதுகிறார்.

நடிகை அன்ஷிதாவை மீண்டும் தொடரில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் புதிய தொடரின் பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது. இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொடர் குழுவினர் பலர் பங்கேற்றுள்ளனர்.

எனினும், இத்தொடருக்கான பெயர், ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?

மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை மதிப்பிடமாட்டேன்: அஜித்

நடிகர் அஜித் குமார் தான் யார் என்பதை மற்றவர்களின் விமர்சனங்களால் மதிப்பிட மாட்டேன் எனக் கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்ப... மேலும் பார்க்க

வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு - வெற்றி மாறன் படம்?

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யுனிவர்ஸில் இருக்குமென தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இ... மேலும் பார்க்க

தனுஷ், ரஷ்மிகாவுக்கு வாழ்த்து கூறிய விஜய் தேவரகொண்டா: தனுஷ் பதில்!

குபேரா படத்துக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா தனுஷ், ரஷ்மிகாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் குபேரா. இதில் தனுஷுக்கு ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்துக்கு இடையே ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்ஸியை பெற்ற டிரம்ப்!

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் அன்டோனியோ கோஸ்டா ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை... மேலும் பார்க்க

ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். வேலன் படத்தின் மூலம் தம... மேலும் பார்க்க