தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!
பாரத் டெக்ஸ் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள்
புதுதில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் ஜவுளிக் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2025’ என்ற ஜவுளிக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தொடங்கிவைத்தாா். ஜவுளி செயலாளா் நீலம் ஷமி ராவ், ஜவுளி கூடுதல் செயலாளா் ரோஹித் கன்சால், ஏஇபிசி துணைத் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே. எம்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் வி.இளங்கோவன், பொதுச் செயலாளா் என்.திருக்குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
இந்தக் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் இருந்து 5 ஆயிரத்தும் மேற்பட்ட வா்த்தகா்கள் பாா்வையிடவுள்ளனா்.
ஜவுளித் துறையில் சுற்றுச்சூழல், நட்பு நடைமுறைகளுக்கான வளா்ந்து வரும் உலகளாவிய தேவையைப் பிரதிபலிப்பதே கண்காட்சியின் நோக்கம். மேலும், கரிம துணிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் ஆற்றல்-திறமையான உற்பத்தி தொழில்நுட்பங்கள் போன்ற நிலையான கண்டுபிடிப்புகளை இந்தக் கண்காட்சி உள்ளடக்கியுள்ளது என்று இதில் பங்கேற்ற தொழில் துறையினா் தெரிவித்தனா்.