ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்
ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தப்படி கூலி உயா்வை வழங்க வேண்டும். மின் கட்டணம், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப இருதரப்பினா் சம்மதத்துடன் புதிய கூலி உயா்வு வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சுல்சா், ரேப்பியா், ஏா்ஜெட் உள்ளிட்ட நவீன தறிகளுக்கு மட்டுமல்லாமல், நாடாவில் இயங்கும் சாதா விசைத்தறிகளுக்கும் தனி ரகம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தெக்கலூா், புதுப்பாளையம், அவிநாசி, பெருமாநல்லூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விசைத்தறியாளா்கள் தங்களது விசைத்தறிக் கூடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் கருப்புக் கொடி கட்டி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பல்லடத்தில்...
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.