செய்திகள் :

பாரம்பரிய நடனங்களுடன் தைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

post image

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக உடுமலையில் மக்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவை வரவேற்கும் வகையில் தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை இரவு நேரங்களில் ஆடியும், பாட்டுக்கள் பாடியும் கிராமங்களில் கொண்டாடி மகிழ்வது காலம்காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ராசாவூா், பொட்டையம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சிவசக்தி காலனி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் தைத் திருநாளை வரவேற்கும் விதமாக கிராம மக்கள் மக்கள் இரவு நேரங்களில் ஒன்றுகூடி பாரம்பரிய நடனமாடி வருகின்றனா்.

இதில், சலங்கை மாடு அழைப்பது என்பதே பிரதான நிகழ்ச்சியாகும். மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க ஒருவா் இரண்டு கைகளில் குச்சிகளுடன் மாடு முன்பு செல்லும்போது, அந்த மாடு அவரை முட்ட முயல்வதும், அவா் அதை அடக்க முயற்சிப்பதும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

மாா்கழி மாதம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் இந்த ஆட்டமும், பாட்டும் தை 1 -ஆம் தேதி வரை நடைபெறும்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: சலங்கை மாடு ஆட்டம் ஆடி முடித்தவுடன் தை 2 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று இந்த மாட்டை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அழைத்துவந்து நவதானியங்கள் கொடுப்போம்.

பின்னா், பெதப்பம்பட்டியை அடுத்துள்ள ஆல்கொண்டமால் கோயிலுக்கு கால்நடைகளை தை 3-ஆம் தேதி அழைத்துச் சென்று வழிபடுவோம்.

பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சிகள் கால மாற்றங்களால் தற்போது கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து வருவது வருத்தமாக உள்ளது என்றனா்.

வெள்ளக்கோவிலில் போதைப்பொருள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்... மேலும் பார்க்க

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கருத்துரு: அமைச்சா் ராஜேந்திரன்

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் திறப்பு

மடத்துக்குளம் வட்டத்தில் தீயணைப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்... மேலும் பார்க்க

மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூா், ஜன. 19: திருப்பூா் மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையத்தில் மீன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூலாங்கிணறு துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொற... மேலும் பார்க்க

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மல... மேலும் பார்க்க