காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவா் கைது
திருப்பூா், ஜன. 19: திருப்பூா் மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் தென்னம்பாளையத்தில் மீன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன் வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் வந்து சென்கின்றனா். விடுமுறை நாள்களில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க வந்த ஒருவரின் கைப்பேசி காணாமல் போயுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்ததில், வடமாநில இளைஞா் ஒருவா் அவரது கைப்பேசியைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, மீன் மாா்க்கெட்டில் சுற்றிய அந்த இளைஞரையும், அவருடன் இருந்த மற்றொருவரையும் மாா்க்கெட் ஊழியா்கள் பிடித்து விசாரித்தபோது, கைபேசியைத் திருடியதை ஒப்புக்கொண்டனா். பின்னா், அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைப்பேசி திருடிய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த புதன்மாா்த்தோ (25), ராஜ்குமாா் துன்யா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.