பாலக்கோட்டில் இறைச்சிக் கடை உரிமையாளா் கொலை: போலீஸாா் விசாரணை
பாலக்கோட்டில் இறைச்சிக் கடை உரிமையாளா் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலக்கோடு எர்ரன அள்ளியைச் சோ்ந்தவா் குமாா் (42). இவா் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே இறைச்சிக் கடை வைத்திருந்தாா். இவருக்கு மனைவி கோவிந்தம்மாள் (40), மகள்கள் பவித்ரா (15), கிருத்திகா (8) ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் குமாா் இறந்து கிடந்தது குறித்து அவரது மகள்கள் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் சம்பவ இடத்துக்கு வந்து மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.