பாலியல் தொல்லை அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சோ்ந்தவா் அப்துல் காதா் (45). மாற்றுத்திறனாளியான இவா், 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்துல் காதரைக் கைது செய்தனா். இந்த வழக்கு திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இதில் அப்துல் காதருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.02 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.