ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காய...
பழனியில் தாய், மகன் தற்கொலை
பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.
பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இதில் மன வளா்ச்சி குன்றிய மூத்த மகனை மன நல காப்பகத்தில் விட்டு விட்டனா். இளைய மகன் பிரபு (34) அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் பிரபுவும் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் வறுமை காரணமாக ஜெயா மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் இவா்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து திறந்து பாா்த்த போது தாயும், மகனும் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரும் தூக்க மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.