செய்திகள் :

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

post image

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடந்த ஏப். 25 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் முழுமையான திருப்தி இல்லாமல் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையில் அமலாக்கத்துறையின் வாதத்தையடுத்து குற்றப்பத்திரிகை அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா என இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேருக்கு நீதிபதி விஷால் கோக்னே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், விசாரணை தொடர்பாக தங்கள் உரிமையைக் கோரலாம் என்றும் தெரிவித்தார்.

அதாவது இந்த வழக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை நீதிமன்றம் விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சிறப்பு உரிமை உண்டு.

நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு இது உதவும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

1.45 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பு: என்ஐஏ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பிருப்பதாக என்ஐஏ நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பஹல்காமில் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் போா்ப் பதற்றம்: ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட வாய்ப்பு’

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூ... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களின் துறைகள் மாற்றம்

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது. அண்மையில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தற... மேலும் பார்க்க

ரூ. 6,266 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள்: ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவத... மேலும் பார்க்க