உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்
பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
சமீபத்தில் அங்கீகரிப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பைச் செயல்படுத்துவதில் பிரதமர் மோடிக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைப் போலவே, பிரதமரும் அவரது அமைச்சரவையும் இதைத் தொடர அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக 50 சதவீத உச்சவரம்பை அதிகரிப்பதில் மத்திய அரசுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிரதமர் ஒப்புக்கொண்டதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்தியா கூட்டணி நிம்மதியாக உறங்குவோம், ஆனால் பிரதமர் மோடிக்கு இனி உறக்கமிக்லலாத இரவுகள் என்று அவர் தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கேரள அமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், மத்திய அரசு மாநில அரசினுடைய ஒத்துழைப்புடன் சாகர் மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுடைய உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அதன்காரணமாக துறைமுகத்தின் இணைப்பும் அதிகரித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் வலுவான தூண் என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒரே மேடையில் இருப்பது பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்று கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்ததையடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 30 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.