ஸொமாட்டோ அறிமுகப்படுத்தி, சப்தமில்லாமல் நிறுத்தி புதிய சேவை
ஸோமாட்டோ செயலியில் ஆர்டர் செய்தால் உணவுப்பொருள்களை வீடுதேடிக் கொண்டு வந்து கொடுக்கும் ஸொமாட்டோ நிறுவனம், நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய 15 நிமிடத்தில் உணவை வழங்கும் சேவையை சப்தமில்லாமல் நிறுத்திவிட்டது.
அதிவேக உணவு விநியோகத்தில் இருக்கும் சில தொழில்நுட்ப, நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.