செய்திகள் :

விஜே சித்து இயக்கி, நடிக்கும் படம் அறிவிப்பு!

post image

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யூடியூபில் விஜே சித்து வ்லாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் யூடியூபில் பலருக்கும் விருப்பமானவராக இருக்கிறார்.

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து இயக்கி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு, டயங்கரம் எனப் பெயரிட்டுள்ளனர். விஜே சித்துவுடன் இளவரசு, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல்.

இதையும் படிக்க: எஸ்டிஆர் - விராட்! இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது

கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது... மேலும் பார்க்க

கௌஃபுடன் மோதும் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினாா். அதில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா். மகளிா்... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணையும் பிரபல இயக்குநர்!

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் இணைந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் துல்கர்... மேலும் பார்க்க